மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேசிய மகளிர் தலைவியாக டத்தோ மோகனா முனியாண்டி வெற்றி பெற்றார்.!!

சென்னை

மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா)-வின் தேசிய தலைவி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது

மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தேசியத் தலைவி பதவிக்கு தொகுதி வாரியாக எல்லாத் தொகுதிகளிலும் மகளிர் வாக்களித்தனர்.

இதனையடுத்து தேர்தல் முடிவுகள் அனைத்தும் ம.இ.கா தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், டத்தோ மோகனா முனியாண்டி 2,550 வாக்குகள் பெற்று தேசிய மகளிர் தலைவியாக தேர்வு பெற்றார்.

துணைத்தலைவியாக விக்னேஸ்வரி பாபு ஜி 2,303 வாக்குகள் பெற்று தேர்வு பெற்றார்.

தேசிய மத்திய செயல் அவைக்கு போட்டியிட்ட டத்தோ மோகனா முனியாண்டி அணியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் இன்பவள்ளி இருவரும் வெற்றி பெற்றனர்.இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பொன்னாடை மற்றும்ஆளுயர மாலை அணிவித்து கௌரவித்தனர்.

நன்றி தமிழ் லென்ஸ் டாட் காம்

ன்ஸ் டாட் காம்)
மலேசியா

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *