சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!!

சென்னை

சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!!

சென்னை நவம்பர் 10

சென்னையில் சில நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் பம்பரமாய் சுழன்று கொட்டும் மழையில் மின்வாரிய ஊழியர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மின் இணைப்புகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை,கிண்டி சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி,மந்தைவெளி,மயிலாப்பூர்,அடையாறு,மற்றும் வட சென்னை பகுதிகளிலும் பல்வேறு குழுக்களாக மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.கடந்த காலங்களில் கடும் மழை நேரத்தில் பெருமளவு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் ஆனால் தற்பொழுது அரசின் உத்தரவின் பேரில் போர்க்கால முறையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *