சிலாங்கூர் மாநிலம் அம்பாங் பகுதியில் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” எனும் நிகழ்சியில் கொரோனோ தொற்று மற்றும் ஏழ்மையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் செண்டிரியன் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!!

சென்னை

மலேசியாவில் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவே இம் முயற்சியில் இறங்கினேன் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் பேட்டி.!!

மலேசிய நாட்டில் ஏழை மக்களிடையே நிலவி வரும் வறுமையை போக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கினார் சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன்.

இந்த ஆண்டு தீபாவளி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி அவர்களை முகத்தில் புன்னகையே மிளிர செய்தார். சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன்.

அம்பாங், பண்டான் இண்டாவிலுள்ள திரியும்ப் மண்டபத்தில் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராஸி மற்றும் அம்பாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து நடத்திய “மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” எனும் நிகழ்வின் வழி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் செண்டிரியன் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் , ஒரு பகுதி உணவுப் பொருட்களை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்.

கடந்த தீபாவளி காலங்களில் மட்டுமில்லாது அனைத்து விழாக்காலங்களிலும் பல்வேறு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றிவருகிறார் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

திரியும்ப் மாநாட்டு மண்டபம் மற்றும் ஜேவி சொலுஷன் நிறுவனமும் இந்நிகழ்விற்கு தங்களின் முழு ஆதரவை வழங்கி சிறப்பித்தன.

இந்நிகழ்வுக்கு ஆதரவளித்த டத்தோஸ்ரீ ஜெயந்திரன் மற்றும் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மலேசிய கெஸட் நிருபர் கஸ்தூரி ஜீவன் இருவருக்கும் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராஸி துணைத் தலைவர் மோகன்ராஜ் வில்லவன் நினைவு அன்பளிப்பை வழங்கி சிறப்பித்தார்.

அம்பாங் வாட்டாரத்தில் இளைஞர்கள் கூட்டணியின் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அனைவரும் நாட்டின் செயல்பாட்டுத் தர விதிமுறைகளை முறையாக பின்பற்றி கலந்துக் கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *