*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

சென்னை

 

 

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே நீ தாண்டி” இசை ஆல்பம் உலகமெங்கும் பல்லாயிரக்கணக்காண பார்வையாளர்கள் யூடியூப் சமுகவளைதளங்களில் கண்டு களித்தனர். இவர் தற்போது சில நாட்களுக்கு முன் சகோதர-சகோதரி பாசத்தை வெளிப்படும் “குறும்புக்காரி” இசை ஆல்பத்தை வெளிட்டடார். பிரசாத் குமாரு – ஸ்விஸ்சர்லாந்து நாட்டை சேர்ந்த தமிழ் பாடகி அமிர்தா சுதர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த ஆல்பத்தின் பாடல்வரிகளை இன்பம் அருளைய்யா மிக அற்புதமாக எழுதியுள்ளர் டி. பிரியன் இசை அமைத்துள்ளார். இந்த இசை ஆல்பம் அண்ணன் தங்கை பாசப்பிணைப்பை வெளிப்படும் வரிகள் கொண்டுள்ளதால் உலக தமிழர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *