தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் பிறந்தநாள் விழா.!!

சென்னை

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் கடந்த 16.12.2021ஆம் தேதி கோலாகலமாக கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மனித வள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நாடு தழுவிய நிலையிலுள்ள தலைவர்கள், உறுப்பினர்கள், மகளிர், இளைஞர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். முறையான அரசாங்க நடமாட்டக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து அனைவரும் தேசியத் தலைவருக்குச் சிறப்பினைச் செய்து பிறந்த நாள் விழாவிற்கு மெருகூட்டினர்.

மேலும் இவ்விழாவினில் தேசியத் தலைவருக்கு அழகான கவிதைப் பாடி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார் ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளையின் பொருளாளர் ஆசிரியை கு. தனலட்சுமி அவர்கள். தொடர்ந்து இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக தலைவரின் சிறப்பு சேவைகளும், அர்ப்பணிப்புகளையும் போற்றும் வண்ணம் அழகான காணொலிப் பதிவினை ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளையின் வாயிலாக மலேசியன் இந்தியர் காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியத் தலைவரின் முன்னிலையில் ஒளித்திரைக் காட்சி வாயிலாகத் திரையிடப்பட்டது.
இந்த அற்புதமான காணொலிக்காக தமிழ்த்திரையுலகின் பின்னணிப் பாடகர் திரு. செந்தில்தாஸ் வேலாயுதம் அவர்கள் தம் வசீகரக் குரலால் பாடிய பாடல் அனைவரையும் ஈர்த்தது.
மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வரலாற்றில் முத்திரைப் பதிக்கப்பட வேண்டியது.

(மலேசியாவில் இருந்து  தமிழ் ஒலி செய்திகளுக்காக கே.எஸ்.செண்பகவள்ளி)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *