நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17வது நினைவுநாள் இன்று அவரது நினைவிடத்தில் நடந்தது.!

சென்னை

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது இதையொட்டி அடையரில் அமைந்துள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சிவாஜி மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு ,பேரன்கள் விக்ரம் பிரபு,துஷ்யந்த், ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர் அதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர் சங்க மற்றும் நிர்வாகிகள் நடிகர் மனோபாலா,உதயா ஆகியோர் சிவாஜியின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பிரபு பேட்டியளித்தார் .

இலட்சக்கணக்கான ரசிகர்கள், தமிழ்ப்பட ரசிகர்கள் சிவாஜியை நினைவில் எடுத்துச்செல்கின்றனர்

சிவாஜி பிறந்த நாளை அரசுவிழாவாக கொண்டாடவுள்ளதாக அரசு அறிவித்ததற்கு நன்றி

ஜெயலலிதா, கருணாநிதி, எம் ஜி ஆர் உள்ளிட்டோரின் பங்களிப்பு மணிமண்டபத்தில் உள்ளது

திரைப்பட ரசிகர்களின் நினைவில் உள்ளவரை அவர் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே கருதுகிறேன் என அவர் கூறினர்

நடிகர் நாசர் பேட்டியளித்த போது .

தினம்தினம் இந்த நொடியிலும் சிவாஜி பேசிக்கொண்டு, நடனமாடிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்

சிவாஜியின் சாயல் இல்லாமல் யாரும் நடிக்க முடியாது

அவர் பயணித்த தூரத்தில் எங்களால் பயணிக்க முடியாது

சிவாஜி எந்தவித விமர்சனத்திற்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டவர் என அவர் கூறினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *