புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய அற்புத தகவல்!!

சென்னை

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தமிழ்த் திரையுலக நாயகர்களுள் முதலிடத்தைப் பெற்று, அதன் பின்னர் தன் வாழ்நாள் உள்ளளவும் அந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தான் ஈட்டிய பொருளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஏழை எளிய மக்களின் சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு மக்களின் மேல் மிகுந்த அக்கரை கொண்டு விளங்கியமையால் அவருக்கு “மக்கள் திலகம்” எனும் பட்டத்தை வழங்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன்.

வறியார்க்கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து

எனும் குறளின் வழி நின்று தன் வாழ்நாள் உள்ளளவும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்கிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். இவரது கருணை உள்ளம் கண்டு வியந்து திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு இட்ட பெயர் “பொன்மனச் செம்மல்” என்பதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *