ஜம்மு-காஷ்மீரில்5 தீவிரவாதிகள் இந்திய ராணுவ படையால் சுட்டுக் கொல்லபட்டனர் !!!!

சென்னை

 

ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோப்பியான் மாவட்டத்தில், கில்லோரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இந்த மோதலில் நேற்றிரவு ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரின் உடல்களும், அவர்கள் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *