கேரள வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் உதவி தி.நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது !! !!

சென்னை

 

புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்…

கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .
மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *