கேரளாவில் அபாய சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது !!

சென்னை

கேரளாவில் இன்று  அபாய சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. கொச்சின் விமான ஒடுபாதையில் வெள்ளம் புகுந்தது!!

கேரளாவில் உள்ள மொத்தம் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கபட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் இன்று மட்டும் இடுக்கி, மலப்புரம் மற்றும் திரிசூர் மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர்.

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். இதனால் அணைகளை ஒட்டி இருந்த கிராமங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளது. உதவிகளை செய்து வருகிறது.

கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்களாகும். ஏறக்குறைய கேரளா முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கேரளாவில் இன்று ஒரேநாளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழப்பு.

இதனால் கேரள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு. மழை வெள்ளத்தில் கொச்சின் விமான நிலைய ஒடுபாதையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *