பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக 1 மணி நேரம் வேலைநிறுத்தம்.!!

சென்னை தமிழகம்

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக 1 மணி நேரம் வேலைநிறுத்தம் ….!

சென்னை.பிப்.4-

மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் 2- வது நாளாக இன்று மதியம் உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இதில்,
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு,
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு,
எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கம், மற்றும்
ஐ.சி. வளர்ச்சி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர்கள் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி ஊழியர்கள்,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடு உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் நிருபர்களிடம்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது :-

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தவறான அறிவிப்பு.
மக்களுடைய கருத்துக்களை கேட்டு மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும்.
இந்த அறிவிப்பை கைவிட கோரி
அரசியல் வாதிகளை சந்திப்பது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச போகிறோம்.
அரசின் முடிவை நிச்சயமாக தோற்கடிப்போம்.
எங்களுடைய
அலுவலகத்தில் இந்த 1 மணிநேரம் எந்தவித வேலையும் ஏற்படவில்லை.
மத்திய அரசு தனியாக்கு விற்கும்
அறிவிப்பை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *