சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.!!

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி மாநில அளவிலான உயரம் தாண்டுதலில் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து 1.76 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கும் அவருக்கு சிறந்தமுறையில் பயிற்சியளித்த பயிற்சியாளர்  ஜெயதாஸ் அவர்களை நாகர்கோவில் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Loading

Continue Reading

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!! உலக பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன்  வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டனர். பசலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் விளங்குகிறது  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா […]

Loading

Continue Reading

மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.!!

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட தி.மு.க. வின் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!!

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!! சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது . இந்த புகைப்படம் கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 21ம் தேதி சந்திரயான்-2 மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 22ம் தேதி இஸ்ரோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Loading

Continue Reading

உலகக் கோப்பை  சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல நான் காத்திருந்த நாள்கள் அதிகம் பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர் பேட்டி.!!

உலகக் கோப்பை  சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல நான் காத்திருந்த நாள்கள் அதிகம் பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர் பேட்டி.!!   உலககோப்பை சேம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டி  தொடர் சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில்  நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து […]

Loading

Continue Reading

சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீதர் டான்ஸ் அகடாமி நடனப்பள்ளி இன்று திறந்து வைக்கப்பட்டது.!!

சென்னை திருவல்லிக்கேணியில் நடன இயக்குனர் ஸ்ரீதரின் A.R.S அகடாமியின் புதிய நடன பள்ளி இன்று சினிமா நடன ஆசிரியர் ஸ்ரீதர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள்,A.R.S சினி நடன அகடாமியில் பயிற்சிபெறும் ஏராளமான மாணவ மாணவிகள் வந்திருந்தனர். இன்று திறக்கப்பட்ட இந்த நடன பள்ளியை பார்க்க அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சினி டான்ஸ் மாஸ்டர் உதவியாளர் பவானி வரவேற்றார். இந்த A .R.S […]

Loading

Continue Reading

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி உடலுக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி அஞ்சலி.!!

அருண் ஜெட்லி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் அஞ்சலி சோனியா காந்தி அஞ்சலின்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லி: முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் […]

Loading

Continue Reading

சென்னை பாஜக அலுவலகத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு அஞ்சலி.!!

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மரியாதைக்குரிய திரு அருண்ஜேட்லி அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாநில அமைப்புச் செயலாளர் திரு கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!! உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 9-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.

Loading

Continue Reading

ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!!

ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!! முன்னாள் முதல்வர் ஜெ. இருந்தபோது கட்சிப் பொறுப்பாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசினாலோ அல்லது அவர்களுடைய குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டாலோ உடனடியாக கட்சியின் அடிமட்ட உறுப்பினரிலிருந்தே தூக்கி விடுவார். அந்த அளவுக்கு அதிமுகவினர் எதிர்க்கட்சிகளிடம் பேசவும், பழகவும் அஞ்சி வந்தனர். ஆனால் தற்பொழுது ஜெ. இல்லாததால் அதிமுக வில் உள்ள பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமாகவே எதிர்க்கட்சிகளிடம் பேசுவதும், குடும்ப விஷயங்களுக்கு போய் வருவதும் நடைமுறையாகி விட்டது. அதுபோல் […]

Loading

Continue Reading