திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டசெயலாளர் மோகன் திமுக கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா.சிற்றரசு திறந்துவைத்தார்.!!

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்; திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டக் கழக செயலாளர் மோகன் அவர்களின் வட்டக் கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா. சிற்றரசு திறந்துவைத்தார். மேலும் அந்த வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ARPM.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

Loading

Continue Reading

எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார்.!!

எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் : 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி சென்னை.ஜீன்.27- எழும்பூர் தாய் சேய் நலமருத்துவமனையில், பாலூட்டும் தாய்மார்கள் 68 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. எழும்பூர் தாய் சேய் […]

Loading

Continue Reading

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று சமூக இடைவெளியுடன் எளிமையாக நடைபெற்றது.!!

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று எளிமையாக சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு […]

Loading

Continue Reading

இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ்.காமேஸ்வரன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.!!

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான, பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ். காமேஸ்வரன் அவர்களின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Loading

Continue Reading

மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை கமலஹாசன் இன்று அறிவித்தார்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இன்று (26-06-2021) நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், […]

Loading

Continue Reading

திருக்கோயில் பணியாளர்களுக்கு இலவச கொரோனோ தொற்று பரிசோதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கெரோனோ இல்லாத தமிழ்நாடு என்ற நிலையில் கொண்டுவர அமைச்சர்களுக்கும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூர் லட்சுமி மஹாலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை 1 மற்றும் 2வது மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்குமான இலவச கரோனா நோய் தொற்று பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ. ஆ. ப,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் […]

Loading

Continue Reading

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்..!!

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்..!! ’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ பற்றி குறும்படம் எடுக்கப்பட்டு அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இது பற்றி ’கட்டில்’ திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு […]

Loading

Continue Reading

கவியரசு கண்ணதாசன் 95வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.!!

சென்னை தியாகராய நகரில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குதொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் […]

Loading

Continue Reading

ஒன்றிய அரசு’ என்ற சொல் தவறானதல்ல: மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று சட்டப்பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு […]

Loading

Continue Reading

நடிகர் சூர்யா-ஜோதிகா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.!!

உலகம் முழுவதும் கொரோனோ தோற்றுப் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் திரைப் பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இன்று பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Loading

Continue Reading