தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் பொதுக்குழு கூட்டம்.!!

சென்னை டிசம்பர் 31 தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைவர் பி.ஏ. ராஜு, பொது செயலாளர் எல்.சீனிவாசன், துணைச் செயலாளர் ராஜேஷ், துணை தலைவர்கள், குமரேசன், ஹரி, பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் பதவியேற்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன் திரைப்பட இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட ஒளிப்பதிவாளர் […]

Loading

Continue Reading

நடிகர் விஷால் கைது. திரையுலகத்தினர் அதிர்ச்சி.!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்  நிர்வாகிகள் பலர் சங்கத்திற்கு வருவதே இல்லை என்றும் விஷால் சுயநலத்திற்காக சங்கத்தை பயன்படுத்துகிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்த எதிரணியினர், நேற்று அதிரடியாக தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அத்துடன் பிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள தயாரிப்பாளர்சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஷால் ஆதரவாளர்கள் […]

Loading

Continue Reading

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா.!!

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா.!! டிசம்பர் 29, 30, 31-ல் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 […]

Loading

Continue Reading

அமைச்சர் ஜெயக்குமாரிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு வீரர்கள்.!!

திருநெல்வேலி ‘Rifle club’ ஐச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் முகம்மது சமீர் சேட் மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜமீனா பர்வீன் ஆகியோர் தேசிய அளவில் புது டெல்லியில் நடைபெறும் தேர்வுச் சுற்றில் பங்கேற்க புது டெல்லி செல்லும் முன் அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Loading

Continue Reading

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை தெய்வநாயக பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை தெய்வநாயக பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. அரசியல் முன்னணி பிரபலங்களும் தொழிலதிபர்களும் குடும்பத்துடன் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Loading

Continue Reading

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் இன்று பதவி ஏற்றனர்.!!

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கல்யாண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்க ஒரே வாகனத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மு க ஸ்டாலின் பயணம் செய்தனர்.

Loading

Continue Reading

நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன் சோனியா பேச்சு.!!

காங் மூத்த தலைவர் சோனியாகாந்தி பேச்சு: நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த நாளில் தலைவர் கலைஞரின் வாழ்க்கையை அவர்களின் வரலாற்று சாதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன். தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்து தமிழகத்தை நிர்வகித்தவர். தமிழக சட்டமன்றத்திற்கு 13 முறை போட்டியிட்டு தோல்வியே காணாதவர். தமிழை செம்மொழியாக அறிவித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி. தமிழ் மீது தீராப்பற்று கொண்ட […]

Loading

Continue Reading

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா ராகுல் பங்கேற்பு.!!

கருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு.!! சென்னை : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,16) மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார். விழாவில் கேரள, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, பிரபு, உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. இதனையடுத்து அங்கு இருந்த அண்ணாதுரை […]

Loading

Continue Reading

புயல் பற்றிய வானிலை எச்சரிக்கை.!!

வானிலை – எச்சரிக்கை! வங்ககடலில் உருவாகி வலுவடைந்த “பெய்ட்டி” புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே மரம், பேனர்கள் உள்ளிட்ட காற்றினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பொருட்களின் அருகில் நிற்க வேண்டாம். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நாளை முதல் வழக்கமான வானிலை நிலவும் என வானிலை அதிகாரி தெரிவித்தார்

Loading

Continue Reading

ராதாரவியின் ‘டத்தோ’ பட்டம் போலி என்று கூறிய சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி !!

ராதாரவியின் ‘டத்தோ’ பட்டம் போலி என்று கூறிய சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி !! ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி அண்மையில் கூறியிருந்தார். இதுக்கு ராதாரவி தற்போது பதில் அளித்துள்ளார். அதில அவர் சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை. இப்போது என்னிடம் […]

Loading

Continue Reading