சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு.!!

மருத்துவம்

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு: நவீன மருத்துவ முன்னேற்றங்கள் குறித்துஆலோசனை நடத்தப்பட்டது!!

சென்னை ஆகஸ்ட் 10

சிறுநீரகவியல் (Nephrology) துறையின் மிக முக்கிய அங்கமான டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் துணை மருத்துவ சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கும் வகையிலான, டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான சங்கத்தின் (Society for Dialysis Technologists & Paramedicals – SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு (SDTPCON-2025), இன்று ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மெயின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்:

சிறுநீரகச் செயலிழப்பு அதிகரித்து வரும் இன்றைய சூழலில், டயாலிசிஸ் சிகிச்சை என்பது லட்சக்கணக்கான நோயாளிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த சிகிச்சையின் வெற்றி என்பது மருத்துவர்களைப் போலவே, திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களின் கையிலும் உள்ளது. இத்துறையில் ஏற்பட்டு வரும் அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய சிகிச்சை முறைகள், மற்றும் நோயாளி பராமரிப்பில் சிறந்த நடைமுறைகள் குறித்து தங்களுக்குள் அறிவைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு முக்கிய தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.

இந்த ஒருநாள் மாநாட்டில், டயாலிசிஸ் துறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகள், செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு, நோயாளி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய நெறிமுறைகள், மற்றும் இத்துறையினர் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.

SDTP மாநாடு, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பிரதான கலையரங்கில், காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது இதில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

இந்த மாநாட்டை SDTP சங்கம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தது சங்கத்தின் தலைவர் டி. ஜெயசீலன் அவர்களும், சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளரும், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான ஆர். செந்தில் (எ) நடராஜன் அவர்கள் இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.தலைவர் ஜெயசீலன்,துணைத் தலைவர் B.ரூபன்,இணை செயலாளர் y.ஆரோக்கியதாஸ்,பொருளாளர் A.T.ஸ்ரீ முகுந்த் நெட்வொர்க் இல்லை கலந்து கொண்டனர்

இந்த மாநாடு குறித்து ஆர். செந்தில் (எ) நடராஜன் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் இந்த மாநாடு, எங்கள் துறையினருக்கு ஒரு புத்துணர்ச்சியையும், புதிய கற்றல் அனுபவத்தையும் வழங்குகியது நோயாளிகளுக்கு இன்னும் சிறந்த சேவையை வழங்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் 18வது SDTP மாநாடு, அந்த வெற்றி அடைவதற்கான ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

இந்த மாநாடு, டயாலிசிஸ் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், சக நிபுணர்களுடன் கலந்துரையாடி புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு எளிதாகச் சென்றடைய, அழைப்பிதழில் QR குறியீடும் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *