
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் தெய்வதிரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ம் ஆண்டு நினைவு நாள் குரு பூஜை, 18.11.25 , செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் ,தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்துலக முதலியார்..வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர்..தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள், ஐயா வ.உ.சி. அவர்களுக்கு ஒட்டபிடாரத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் திரு.நைனார் நாகேந்திரன், MLA ,தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் திரு.கே.பி.கே.செல்வராஜ், அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க தலைவர் Dr.R.அருணாச்சல முதலியார், புதிய நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் கோ.சமரசம், தென்மண்டல செயலாளர் கே.வெங்கடாசலம் பிள்ளை, நெல்லை ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், AIMPA தலைவர் ஓம்சக்தி ஆர்.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் R.S.K.ரகுராம், பொருளாளர் ரவி முதலியார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த குருபூஜை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஐயா வ.உ.சி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

