முதல்வர் உத்தரவுப்படி கொரோனா நிவாரண நிதி ரு.2000 சமையல் பொருட்கள் அடங்கிய பை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.!!
தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பெருமாள் கோயில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவுத்துறை சார்பில் கொரோனா பேரிடரில் அரசு நிவாரணமாக வழங்கும் மளிகை தொகுப்பு மற்றும் குடும்ப அட்டைக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000த்தை வழங்கினார். உடன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
Continue Reading