தமிழக அரசு டாஸ்மாக் கடை திறப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்
கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியும், மது விலக்கிற்காக மகாத்மா கொடிபிடித்ததும் அர்த்தமற்றதாய் போய்விட்டன. காந்தி- இர்வின் ஒப்பந்தத்தின் மூலம் சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப் பட்ட போதும், மதுக்கடைகளின் முன்பு மறியல் நடப்பது நிற்காது என்று அறிவித்தார் காந்தி. மதுவின் பிடியிலிருந்து விடுபட்டாலொழிய மக்கள் ஏழ்மையிலிருந்து விடுபட முடியாது என்ற உண்மையைச் செல்லும் இடமெல்லாம் கொண்டு சேர்த்தவர் காந்தி.
போதை தரும் பாதையில் சமுதாயத்தின் பண்பாட்டுச் சரிவுப் பயணம் தமிழகத்தில் 1970-ல் துவக்கமானது. 50- ஆண்டுகளை தாண்டியும் இன்றும் அரசின் வருவாய்க்காக வலம் வருகிறது டாஸ்மாக் என்ற பெயரில் அரசின் துறையாக! இன்று மதுவை ராஜதிரவம் என்றும்,
மகா கவிகளின் தாய்ப்பால் என்றும் வாழ்த்தும் கூட்டம் பெருகி விட்டது. *” மதுவால் பாழாக்கப் பட்ட பேரறிவாளர்களை சிந்தியுங்கள்” என்றார் இங்கர்சால். ” ஒழுக்கமும் நேர்மையும் மக்களிடம் பழுதுப் படாமல் பார்த்துக் கொள்வதே ஒர் நல்லரசின் நோக்கமாக இருக்க வேண்டும்” என்றார் கன்பூஷியஸ். ஆனால் இன்றோ மதுவை அரசே விற்கிறதே! ” கள்ளுண்ணாமையைக் கடைப்பிடித்து என்ன கண்டாய் மகாத்மா? மது வியாபாரிகளால் தான் அரசாங்கமே நடக்கிறது! மது ஆலை அதிபர்கள் தான் நாடாளுமன்றத்தில் வெற்றியும் பெற முடிகிறது! இது மக்களின் வீழ்ச்சியா? சமூகத்தின் அலங்கோலமா? அய்யகோ ஆட்சியாளர்கள் தான் சிந்திக்க வேண்டும்.மக்கள் படும்பாட்டை பார்த்தீர்களா? கொடிய நோய்தொற்றிலும் டாஸ்மாக் வியாபாரம் அரசுக்கு தேவையா? தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய கோகுல மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.