இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்களாக 10 கிலோ பொன்னி அரிசி மற்றும் 20 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய 250 எண்ணிக்கை தொகுப்புகளை நன்கொடையாக வழங்கினார்.!!
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு
அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்குகினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், இந்திய உழைக்கும் பத்திரிகை சம்மேளன தேசிய செயலாளர் கா.அசுதுல்லா, மூத்த பத்திரிகையாளர் நூருல்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்