திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.!!
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில் திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால் அவர் வாடகை எடுத்த வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தார். இதையடுத்து நடிகர் விஜயகுமார் கேட்டபோது இது என்னுடைய சொத்து காலி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். மதுரவாயல் போலீசார் விசாரணை செய்ய வனிதாவைஅழைத்தனர். இன்று அவர் காலையில் காவல் நிலையத்துக்கு வந்தார். தகவல் அறிந்த செய்தியாளர்கள் வனிதா வீட்டிற்கு சென்று செய்தி சேகரிக்க சென்ற போது நிருபர்களிடம் வ வனிதா நிருபர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார். மேலும் அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.