மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தம் அளிப்பதாக மாநிலங்களவை முன்னாள் எம்.பி.மைத்ரேயன் வருத்தம்.!!
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டாக்டர் மைத்ரேயன் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் கூறியதாவது..
புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையேற்று அதிமுகவில் என்னை இணைத்து கொண்டு 20 ஆண்டுகள் பணியாற்றினேன் என்றும்
இதில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்தார்கள் அவர்கள் இட்ட
பணிகளை கட்டளைகளாக ஏற்று புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தூதராக செயல்பட்டு இருப்பதாகவும் நேற்றுடன் பதவி முடிந்த நிலையில்
சென்னைக்கு வந்ததும் நான் செய்ய வேண்டிய கடமை ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நன்றி செலுத்துவது தான் என்றும் அதன் அடிப்படையில் தற்போது அஞ்சலி செலுத்தியதாகவும் கூறினார்.
மேலும் ஈழத்தமிழர் தொடர்பான கேள்விக்கு..2007ல் இருந்தே தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தான் குரல் கொடுத்து வந்துள்ளதாகவும்
2013ல் பிரிவு உபச்சார விழா நடைப்பெற்றது என்றும் அப்போது கூட இதுக்குறித்து தான் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்சி மாறப்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு..யூகங்கள் யூகங்களாகவே இருக்கட்டும் என்று கூறிய அவர் எப்போதுமே தான் களப்போராட்டக்காரர் என்றும் களத்தில் இருந்து சந்திப்பேன் என்றும்
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட வேண்டும் என்று விரும்பிதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பார்கள் என்று எண்ணினேன் ஆனால் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றும் கூறினார்.
அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு..
தேர்தல் வரும் போது அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தெரிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.ஒற்றை தலைமை இரட்டை தலைமை இரண்டிலுமே சாதகம் மற்றும் பாதகங்கள் இருக்கின்றன..இரட்டை தலைமையாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார் .ஜெயலலிதா இருந்திருந்தால் உங்களுக்கு பதவி அளித்திருப்பார் என்று எண்ணியுள்ளீர்களா? என்ற கேள்விக்கு அவர்் கூறியதாவது
ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பலரது மனதிலும் எதிரொலிக்கும்…அதேப்போல் தான் எனக்கும். எதிரொலிக்கிறது என தெரிவித்தார்.