உலகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.!!

சென்னை தமிழகம்

திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்..

உலக பால் தினத்தையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு விருது வழங்கினார்…

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நாட்டு மாடுகளின் பால் உற்பத்தி குறைந்துகொண்டே வருவதை அடுத்து, பல இடங்களில் கலப்படம் பால் விற்பனையாவதாக வந்த குற்றச்சாட்டுக்கு பரிசோதனை செய்து பார்க்கப்படும் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்தபோவதாகவும், விற்பனை விலையை மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்….

காங்கிரஸ் என்றாலே பிரச்சனைதான்…
எப்போதும் காங்கிரசில் உட்கட்சி பூசல் உள்ளது…அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை, காங்கிரசுக்கு அதிமுக குறைசொல்ல யோகிதம் இல்லை என்றும் கூறினார்….

மத்தியில் காங்கிரஸ் வரவேண்டும் என்றுதான் பெரும்பாலான மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்…இந்த தேர்தலை பொருத்தவரை மோடியின் எதிர்ப்பலையும் இல்லை, எடப்பாடியின் எதிர்ப்பலையும் இல்லை என்றும்..ராஜீவ் காந்தி குடும்பத்தினர் நாடாள வேண்டும் என காங்கிரசுக்கு தான் மக் வாக்களித்துள்ளனர்,, மற்றபடி இது திமுகவுக்கான வாக்கு இல்லை,

கருத்து கூறுவதை விட்டுவிட்டு, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து யோசிக்க வேண்டும்…

நாடாளுமன்ற தேர்தலை வைத்து இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூற முடியாது…

உள்ளாட்சி தேர்தலில் இதே கூட்டணி நீடிப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும்,

எந்த திட்டம் கொண்டுவந்தாலும், தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள்..

மீத்தேன், நீட், ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்ததே திமுக தான். அவர்களின் பிரச்சார யுக்திகளால், இதுபோன்ற விஷயங்கள் மறைக்கப்படுகிறது..திமுக இரட்டை வேடம் போடுகிறது..

மக்கள் அதிமுகவை கைவிடமாட்டார்கள் என்றும், மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவோம் என்று கூறினார்..

அதிமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தமில்லை என்றும், அனைத்து மொழிகளையுமே கற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், தமிழ் மொழியை மறக்கக்கூடாது என்றும் கூறினார்…இந்த தோல்வியை மனதில் வைத்து, படிக்கல்லாக பயன்படுத்தி மீண்டும் வெற்றயடைவோம் என்றும அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்…

பேட்டி: ராஜேந்திர பாலாஜி, அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *