ராகுல் காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி ஏராளமான காங்கிரஸார் சென்னையில் பேரணி.!!



சென்னை மே 30
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக முடிவு எடுத்தார். அதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவர் பதவியில் தொடர வலியுறுத்தி அமைதி போராட்டம் பேரணி நடத்தினர். சென்னையிலும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், ஸ்ரீ வல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, ஈவிகேஎஸ். இளங்கோவன், எச். வசந்தகுமார், கார்த்திக் சிதம்பரம், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி மகளிர் பிரிவு நிர்வாகிகள் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவி ஜான்சிராணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவி மைதிலி தேவி, முன்னாள் எம்பி.ராணி, மானசா, மாவட்ட தலைவி ரஷிதா பேகம்,மதுரம்மாகனி, ஊர்மிளா, புரசை கிரிஜா, சரளா தேவி உள்பட ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் பேரணியாக சென்று காமராஜர் அரங்கில் கூடினர். ராகுல் காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.