மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.!!
சென்னை ஆகஸ்ட் 25
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருந்து, மாத்திரை, துணிகள், உணவு, நிவாரணப் பொருட்களை மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்களால் பல்வேறு இடங்களில் இருந்து
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உதவி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான உதவிகளை மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
இதில் 15 டன் அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ஷீட், நாப்கின், மருந்துப்பொருட்கள், பிஸ்கட்,பெண்கள் ஆடைகள், மற்றும் கிளீனிங் மெட்டீரியல், அனுப்பிவைக்கப்பட்டனஇந்த பொருட்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்டது.
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு லாரிகளை நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கே.சிரஞ்சீவி,செல்வம் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில ஜான்சிராணி, மைதிலி தேவி, சாந்தி ஜோசப், மாவட்ட தலைவர், சிவராஜ சேகரன், மீனவரணி தலைவர் கஜநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்