சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராணி செட்டிநாடு  வித்யாஷ்ரம்  பள்ளியின் 40வது ஆண்டு விழா.!

சென்னை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ​குமாரராணி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 40-வது ஆண்டு விழா: கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.
​சென்னையின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, தனது 40-வது ஆண்டு விழாவை (Ruby Jubilee) மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. நான்கு தசாப்த கால கல்விச் சேவையை நிறைவு செய்துள்ள இந்தப் பள்ளியின் விழாவில் மாணவர்களின் திறமை மற்றும் கலாச்சார சங்கமமாக அமைந்தது.
​விழாவின் முக்கிய நிகழ்வு
​தொடக்க விழாவில் மங்கல இசை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளியின் நிறுவனர் மற்றும் கல்வி ஆலோசகர் டாக்டர் மீனா முத்தையா அவர்கள் ஆசிர்வாதத்துடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
​விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வருவாய்த்துறை துணை ஆணையர்ராஜேஷ் குமார் டிரிக்கா மாணவர்களின் சாதனைகளை பாராட்டி பேசினார் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி கல்வியுடன் சேர்த்து ஒழுக்கம் மற்றும் இந்தியப் பண்பாட்டைக் கற்பிப்பதில் முன்னோடியாக இருப்பதைப் பாராட்டினார்.


​மாணவர்களின் கலைத்திறன்  பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
​மழலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன மற்றும்
​​​பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் சாதனை படைத்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும்,
​பள்ளி முதல்வர் தனது உரையில், “1986-ல் ஒரு சிறிய விதையாகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று 40 ஆண்டுகளில் பல்துறை வல்லுநர்களை உருவாக்கிய ஆலமரமாக வளர்ந்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இந்
​ நிகழ்வில் படிப்பில் சாதனை புரிந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு வருவாய்துறை துணை ஆணையர் ராஜேஷ்குமார் டிரிக்கா பரிசுகளை வழங்கினார் .இந்நிகழ்வில் இப்பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் மீனா முத்தையா அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளியின் முதல்வர் அமுதலட்சுமி, துணை முதல்வர் ஜேம்ஸ் ஆல்வின்,மூத்த ஆசிரியர்கள் ராஜலட்சுமி, காயத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

குமார ராணி செட்டிநாடு வித்யாலயா
(செட்டிநாடு வித்யாஷ்ரம்)

40-ஆவது ஆண்டு விழா – செய்தி அறிக்கை
“பஞ்ச தத்துவம் – ஐந்து மூலக்கூறுகளின் சங்கமம்”

குமார ராணி செட்டிநாடு வித்யாலயா தனது 40-ஆவது ஆண்டு விழாவை 29 ஜனவரி 2026 அன்று மிகுந்த கோலாகலத்துடனும் வண்ணமயமான சிறப்புடனும் கொண்டாடியது. பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் மீனா முத்தையா அவர்களின் ஆசீர்வாதத்துடனும், முதல்வர் டாக்டர் திருமதி எஸ். அமுதலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலுடனும் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

இவ்விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது, தொடர்ந்து நடைபெற்ற மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாணவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

பள்ளியின் ஆண்டு அறிக்கையை மூத்த ஆசிரியர் திருமதி ராஜலட்சுமி அவர்கள் சமர்ப்பித்து, கடந்த ஆண்டின் கல்வி, இணைச் செயல்பாடுகள் மற்றும் பள்ளி பெற்ற சாதனைகளை எடுத்துரைத்தார்.

விழாவின் நிறைவில், உதவி தலைமையாசிரியர் திருமதி காயத்ரி நாராயணன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

  • 40-ஆவது ஆண்டு விழா, மகிழ்ச்சி, பெருமை மற்றும் எதிர்கால நம்பிக்கையால் நிரப்பிய ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *