
கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் பரிமாளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு, திருக்கோயில் சார்பில் பாராட்டு சான்றிதழ் கோவில் நிர்வாகம் வழங்கியது.!
சென்னை பிப்ரவரி 3


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலைமுருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி பாரிமளா கிருஷ்ணா அவர்களுக்கு, அவரின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தப் பாராட்டு, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோக் சுரேஷ் மற்றும் டத்தோ ஸ்ரீ நடராஜா ஆகியோரால் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பாரிமளா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார்.
பல ஆண்டுகளாக இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னார்வ சேவை, சமுதாய சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. “பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது,” என திருமதி பாரிமளா கிருஷ்ணா தனது நன்றியை தெரிவித்தார்.
தைப்பூசம் போன்ற மகத்தான சமய விழாக்களில் தன்னார்வலர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், திருமதி பாரிமளா கிருஷ்ணா போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
பரிமளா கிருஷ்ணா, இவருடன் கோலாலம்பூரை சேர்ந்த திருமதி பத்மாவதி, பிரீக்ஃபீல்ட் சேர்ந்த
.திருமதி எம்.எஸ்.ராணி, திரு. மகேந்திரன் மற்றும் கோலாலம்பூர் திரு. கோவிந்தன்,ஆகியோர் விருது பெற்றனர்.

