
தமிழக நீதி சங்கம் திருவள்ளுர் மாவட்டம் சார்பில் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் திருவள்ளூர்
கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஜனவரி 14

பெரியபாளையத்தில் கண்ணப்ப
முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும்
என திருவள்ளூர் கிழக்கு மாவட்ட
தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக
நீதி சங்கம் சார்பில் பெரியபாளையம்
ஏ.டி.மஹால் திருமண மண்டபத்தில்
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த
ஆலோசனைக்கூட்டத்துக்கு திருவள்ளூர்
கிழக்கு மாவட்ட செயலாளர் செ.பாபு
முதலியார் தலைமை தாங்கினார்.மாநில
கவுரவ ஆலோசகர் எம்.வி.பரந்தாமன்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவை
தலைவர்
கே.தியாகராஜன்,திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட தலைமை செயற்குழு
உறுப்பினர்
பி.என்.ரவிச்சந்திரன், திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட இணை செயலாளர்
என்.சீனிவாசன்,திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்
ரா.சீனிவாசன், திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட பொருளாளர் எல்.நந்தகுமார்,
எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.
ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.இதில்,தமிழக நீதி சங்கத்தின்
நிறுவனத் தலைவர் காஞ்சித்தமிழன்
டாக்டர் என்.கார்த்திகேயன் முதலியார்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியபோது
வேளாளர், முதலியார்.பிள்ளைமார்
ஆகியோரின் ஒற்றுமை குறித்தும்,2026-ம்
ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற
பொது தேர்தல் குறித்தும், இதன்
பின்னர், நடைபெற உள்ள உள்ளாட்சி
அமைப்பு தேர்தல் குறித்தும் பல்வேறு
ஆலோசனைகளை எடுத்து கூறி
சிறப்புரையாற்றி பேசினார்.இக்கூட்டத்தில்,
இம்மாதம் 18-ம் தேதி வேலூர் மாவட்ட
நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பொறுப்பேற்பு
மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்ட தீர்மான அறிக்கையில்
பொன்னேரி
தொகுதியின் ஆலோசனை
கூட்டம் பிப்ரவரி மாதம் நடத்தப்படும்.
பெரியபாளையம் பேருந்து நிலையத்துக்கு
பி.கண்ணப்ப முதலியார் பெயர் சூட்ட
வேண்டும்.மேலும்,கூட்டுறவு வங்கியை
பெரியபாளையம் பகுதிக்கு கொண்டு
வந்த கண்ணப்ப முதலியாருக்கு சிலை
அமைக்க வேண்டும். பொன்னேரிபேருந்து
நிலையத்துக்கு டாக்டர்
சி.நடேசன் முதலியார் பெயர் சூட்டவைக்க
வேண்டும். தமிழக நீதி சங்கத்தை சேர்ந்த
இரண்டரை கோடி மக்களின் கோரிக்கையை
ஏற்று தமிழக அரசு முதலியார் சமூகத்துக்கு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15 சதவிகித
இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.திருவள்ளூர்
கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள்
தோறும் சங்கப் பெயர் பலகையை
திறக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில்
மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி,
ஒன்றியங்கள், ஊராட்சி மன்றங்கள்
உள்ளிட்டவைகளில் முதலியார் சமூகம்
சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
அதிமுக, திமுக, பாஜக,தவெக.சீமான்
னை கூட்டம்
வீதி பெரியாளையர்
கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில்
போட்டியிடும் முதலியார் சமூக
வேட்பாளர்களின் வெற்றிக்கு முழு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வருங்காலத்தில் தமிழக நீதி சங்கம் தேர்தலில்
போட்டியிடுட 24 பேர் கொண்ட வழிகாட்டி
குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் ஏக மனதாக
நிறைவேற்றப்பட்டது.இந்த ஆலோசனைக்
கூட்டத்தில் தமிழக நீதி சங்கத்தின்
அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,
ஊத்துக்கோட்டை ஆரணி பேரூர்
நிர்வாகிகள். எல்லாபுரம் ஒன்றிய
அணி
அமைப்பாளர்கள்.துணை
அமைப்பாளர்கள்,பொன்னேரி நகராட்சி
நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட செயலாளர் செ.பாபு முதலியார்
தலைமையில் முதலியார்.பிள்ளைமார்,
வேளாளர் உள்ளிட்டநிர்வாகிகள் சிறப்பாக
செய்திருந்தனர்.


