விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து…!!
ஒரு கனிக்காக போட்டி நடத்தப்பட்டது விரைவில் உலகை சுற்றி வருபவருக்கு கனி பரிசு என்று அறிவிக்கப்பட்டது. முருகப்பெருமான் உலகை சுற்றப்புறப்பட்டார் விநாயகப்பெருமான், சபயோரைப்பார்த்து அம்மை, அப்பர் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். சபயோர் இரண்டும் ஒன்றுதான் என்று பதிலளித்தார்கள் விநாயக கடவுள் அம்மை, அப்பரை சுற்றி வந்து கனியை பெற்றுக்கொண்டார் தாய், தந்தையர் தான் முதல் உலகம் என்று உலகிற்கு எடுத்துரைத்த விநாயக கடவுளை கொண்டாடுவதை விநாயகர் சதுர்த்தி என்கிற பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இந்து சமுதாயத்தைச் சார்ந்த அனைவரும் அனைத்து வள, நளங்களை பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா தெரிவித்துள்ளார்.