சென்னை மே-13
தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அப்புசாலி சாலையில் விருகம்பாக்கம் பகுதி தேமுதிக சார்பாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் , நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அங்குள்ள பொது மக்களுக்கு தர்பூசணி, முலாம் பழம், இளநீர் மற்றும் பழரசம் ஆகியவை வழங்கினார்…
விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அக்கட்சியின் கழக துணை செயலாளர் பார்த்தசாரதி , மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் தினகர், மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்பு ராஜ், 129வது வட்ட செயலாளர் பாஸ்கர், முன்னாள் பகுதி செயலாளர் அன்னல் ஜெ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அனைத்து இடங்களில் தூர்வாரி, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
நதிநீர் இணைப்பு மிக முக்கிய திட்டம். இதனை மோடி அரசு நிறைவேற்றும் என்றும்,
ஒரு காலத்தில் மின்சார பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்து வருகிறது. அது போல தண்ணீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்
தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்கள் பணியில் முழு கவனம் செளுத்துவார்கள் எனவும்
தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் முடிவுகள் அறிவித்தால் இந்த குழப்பம் இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் வெகு விரைவில் நடத்தப்படும் என கூறிய அவர்
நிலத்தடியில் எங்குமே நீர் இல்லை. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பிலும் கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் நதிநீர் இணைப்பிற்கு நிச்சயமாக முதல் கோரிக்கையாக விடுப்போம். மழைநீர் கடலில் செல்வதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
மேலும் ஸ்டாலின் – சந்திர சேகரராவ் சந்திப்பு இயல்பானது ஒன்று எனவும் அது முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என தெரிவித்தார்….