




தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்.!!


சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் 13 எம்.எல் ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர்.
சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார்.!!
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சட்டப்பேரவை தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் பதில் அளித்தார்.