மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.!!
சென்னை கடற்கரை சாலை அண்ணா நினைவிடம் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமான பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் இன்று பார்வையிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடத்தை தற்போது நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இதற்காக அரசு ரூ.50.80 கோடி ஒதுக்கியுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ், உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி அங்கு நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.