சென்னை திருவல்லிக்கேணியில் நடன இயக்குனர் ஸ்ரீதரின் A.R.S அகடாமியின் புதிய நடன பள்ளி இன்று சினிமா நடன ஆசிரியர் ஸ்ரீதர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும்
திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள்,A.R.S சினி நடன அகடாமியில் பயிற்சிபெறும் ஏராளமான மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.
இன்று திறக்கப்பட்ட இந்த நடன பள்ளியை பார்க்க அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சினி டான்ஸ் மாஸ்டர் உதவியாளர் பவானி வரவேற்றார். இந்த A .R.S சினிமா நடன பள்ளி சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
