பொன்னேரி அருகே நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு சட்டமன்ற உறுப்பினரின் வருகைக்காக நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் ஊழியர்களுடன் பயனாளிகள் வாக்குவாதம்.!!
.பொன்னேரி
பொன்னேரி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்று காலை 9 மணிக்கு தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பலராமன் .கலந்து கொண்டு வழங்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற அலுவல் கூட்டம் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியில் பங்கேற்காததால். பொங்கல் தொகுப்பு நாளை வழங்கப்படும் என மூன்று மணி நேர காத்திருப்புக்கு பிறகு அதிகாரிகள் அறிவித்தனர் இதனால். ஆத்திரமடைந்த பயனாளிகள் தங்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் பொருட்களைக் கூட உரிய நேரத்தில் வழங்காமல் ஆடு மாடுகளைப் போல் தங்களை அதிகாரிகள் நடத்துவதாக குற்றம்சாட்டி.நியாய விலை கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உயரதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அறிவித்தபடி காலதாமதமாக ஆயிரம் ரூபாயுடன் கூறிய பொங்கல் தொகுப்பை வழங்க தொடங்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது