மலேசியாவில் இந்திய வம்சாவழி தமிழ் பெண் செவிலியர் நிஷாவுக்கு கோவிட்காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக தபால் தலையை மலேசிய அரசு வெளியிட்டது.!
மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ Dr.நூர் ஹிஷாம் பின் அப்துல்லா தமிழ் செவிலியர் நிஷாவின் தபால்தலையை வெளியிட்டார்.!!
மலேசியாவில் உள்ள காஜாங் பொது மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியர் திருமதி நிஷாவுக்கு கோவிட் பாதிப்பு காலத்தில் அயாராது பணிபுரிந்த இவரை பெருமைபடுத்தி இவருடைய உருவம் பொறித்த தபால் தலையை மலேசிய அரசு வெளியிட்டுள்ளது பெருமையும் சரித்திர நிகழ்வான இந்த அங்கிகாரம், திருமதி நிஷா அவர்களை,மலேசிய தபால் சேவை நிறுவனம், இவரது உருவம் பொறித்த தபால் தலையில் பதிவு செய்தது மலேசிய இந்தியர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.பெருமைக்குரிய இந்த சிறப்பு நிகழ்வை தமிழ் புத்தாண்டு தொடங்கும் நேரமான சில தினங்களுக்கு முன் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் தலைமை நிர்வாகி அமைச்சர் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ Dr.நூர் ஹிஷாம் பின் அப்துல்லா ( Ketua Pengarah Kesihatan, YBhg. Tan Sri Dato’ Seri Dr. Noor Hisham Bin Abdullah ) இத்தபால் முத்திரையை அறிமுகம் செய்தார்.
சமைக்கும் கரங்களும் சாதனைகள் செய்யும். பெண்கள் மென்மேலும் சரித்திர சாதனைகள் செய்ய தூண்டுகோலாக அமைந்த திருமதி நிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மேலும் மலேசியாவில் இந்தியர்களை கௌரவிக்கும் விதமாக இதற்கு முன்பு மகாத்மா காந்தியடிகளுக்கும்,கர்மவீரர் காமராஜருக்கும் தபால்தலையை மலேசியா வெளியிட்டது.அதன்பின் மலேசியத் தமிழ் பெண் செவிலியர் நிஷாவுக்கு தபால் தலை வெளியிட்டு மலேசிய அரசு கௌரவித்துள்ளது.
படம் – செய்தி (திருமதி பரிமளா கிருஷ்ணன்)