- தமிழக முதல்வராக பதவி ஏற்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மலேசிய மனிதவள துறை அமைச்சரும்
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவரும் டத்தோ ஸ்ரீ சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.!!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப்பெற்று புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கலைஞரின் அன்பு மகன் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம் என அவர் இந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.