எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் : வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கம் நன்றி !!

சென்னை

சென்னை ஜூலை 19 எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வன்னியர் சத்திரியர் கூட்டு இயக்கத்தலைவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கம் தலைவர். சி.ஆர்.ராஜன், படையாட்சியாரின் மகனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் கி.. விஷ்ணு பிரசாத் அமைப்பாளர்கள் பொறியாளர்.கே.மோகன்ராஜ்,  இரா.ரமணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்ட தியாகியும், வன்னியர் சமுதாயத்தின் தனி பெரும் தலைவராக திகழ்ந்தவரும், சமூகநீதிக்கு பாடுபட்டவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் நூற்றாண்டையொட்டி அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் அவருக்கு மணிமண்டபம் மற்றும் திருவுருவ சிலையும் நிறுவப்படும் என சேலம் மேட்டூரில் ,தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அவருக்கு இரண்டரை கோடி வன்னிய மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வன்னிய சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான  எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு அரசு விழாவும், வன்னிய குல சத்திரியர் பொதுச்சொத்து நல வாரியம் சட்டமன்றத்தில் சட்டமாக்கி நிறைவேற்றி தந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரை பெருமை படுத்தும் வகையில் தென் ஆற்காடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு எஸ் .எஸ் .ராமசாமி படையாட்சியார் பெயரில் மாவட்டம் அமைத்தார்.

அதேபான்று மாணிக்கவேல் நாயக்கருக்கு ஜெயலலிதா அம்மையார் தலைமையிலேயே நூற்றாண்டு விழா  நடத்தி  பெருமை படுத்தினார். 1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் அவர்களை வன்னியர் தலைவர்கள் அவரது இல்லத்தில் வன்னியர் தலைவர்களாகிய நாங்கள் சந்தித்தோம். நீங்கள்தான் ஆட்சிக்கு வருவீர்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென தெரிவித்தோம்.  அந்த நேரத்தில் கடலூரில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு ஒரு சிலை நிறுவி அதை உங்கள் கையால் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவர் சிலை  திறந்து வைப்பதாக தெரிவித்தார். அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அனுமதி தராததால், சிலை நிறுவமுடியாத நிலை ஏற்பட்டது. அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக இப்போது மணிமண்டபம் அமைத்து எஸ்.எஸ். ராமசாமிபடையாட்சியாருக்கு திருவுருவ சிலை நிறுவப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி .கே.பழனிசாமி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

ஒன்றன் பின் ஒன்றாக சமுதாயத்தின் கோரிக்கைகள் நிறைவேறி வருகிறது. இதற்கு முழு முயற்சி எடுத்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற  சமுதாய அமைச்சர்கள் மாண்புமிகு எம்.சி .சம்பத். கே.பி.அன்பழகன் கே.சி.வீரமணி இரா.துரைக்கண்ணு ஆகியோருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் எங்கள் கோடான கோடி நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் சிலை நிறுவியதற்கும், வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம் அமைப்பதற்கும் முழு முதல் காரணமாக இருந்தவர்கள்  மறைந்த தலைவர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியையும், வீரபாண்டி ஆறுமுகம் அவர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறோம்.

மேலும் எங்களது தலையாய கோரிக்கையான வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மூலம் தனி ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.)  20 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் 108 சமூககங்கள் பயன்பெறுகிறது என்றால் அதற்கு  உயிர் தியாகம் செய்தவர்கள் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் விழுப்புரம் மாவட்ட மைய பகுதியில் இடஒதுக்கீடு தியாகிகள் மணிமண்டபம்”” அமைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வரை நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் எங்கள் சமுதாய மக்களை ஒன்று திரட்டி, மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *