தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.!! தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்

Continue Reading

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்றது.!!

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் மத்திய சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. இதில் 700க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இந்த பிராமாண்ட கொரேனோ தடுப்பூசி முகாமில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் முதன்மை நிர்வாகிகள் எஸ்.கபில் சாட்லே, பி.பி.பிரசாத், ரிலையன்ஸ் ரவிசுந்தரம், பி.வி.மோகன்ராமன்,டாக்டர் ரபீக், டாக்டர் கொளதம், சஞ்சய், வினோத்குமார், ரத்தன்,ஒய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார்,சிவலிங்கம், சென்னை மாநகராட்சி 9வது மண்டல சுகாதார துறை அதிகாரி டாக்டர் […]

Continue Reading

S.R.M. கல்வி குழுமங்களின் சார்பில் அதன் இணை வேந்தர் பி.சத்திய நாராயணா கொரோனோ நிவாரண பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 1 கோடியே 10 லட்சம் வழங்கினார் .!!

S.R.M கல்வி குழுமம் சார்பில் கொரோனோ நிவாரண பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலமாக 1கோடியே 10 லட்சம் வழங்கியதற்கான கடிதத்தை முதல்வர் மு.க. ஸ்டாலிடம் S.R.M அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் பி. சத்திய நாராயணா வழங்கினார்.உடன் S.R.M.கல்வி குழுமங்களின் தலைவர்கள் சிவகுமார்,நிரஞ்சன் ஆகியோர் இருந்தனர்.  

Continue Reading

செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.!!

செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மோகன் தாரா, மாநில செயலாளர் சங்கர், மாநில இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் நூதன் பிரசாத் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினர். சட்டமன்ற கூட்டத் தொடரில் குறைந்த எண்ணிக்கையில், குறிப்பிட்ட சில நிருபர்களை துறையின் ஒருசிலரின் விருப்பத்திற்கேற்ப சபையில்  அனுமதிப்பதால் சில செய்தியாளர்கள் செய்தி எடுக்க முடியாமல் தவித்து வருவது குறித்தும், கடந்த காலத்தில் பத்திரிகையாளர்களிடையே […]

Continue Reading

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது இதை அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெற்றுக்கொண்டார்.!!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு ஸ்ரீ ராம ஜெயா ட்ரஸ்ட் மூலம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பெற்றுக்கொண்டார் அருகில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு.விக்ரம் கபூர் இ.ஆ.ப.ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

தமிழக முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.!!

தமிழக முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.!! தமிழக முதல்வராக பொறுப்பேற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்அவர்களையும் சென்னை மாநகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமிராமநாதன் அவர்கள் […]

Continue Reading

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.!!

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 6.4.2021 அன்று நடைபெற்ற 16வது தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின் வாக்குகள் 2.5.2021 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளி வந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. 133 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மை பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில், புதியதாக […]

Continue Reading

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பத்திரிகை- ஊடக சங்கங்கள் நன்றி தெரிவித்தன.!!

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன்(MUJ) தமிழ்நாடு ஊடக பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ் நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கங்கள் நன்றி.!! சென்னை, மே 4 செய்தித்தாள், தொலைக்காட்சி,ஓலி ஊடகத்தில் பணிபுரிபவர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் -ஊடக பத்திரிகை யாளர்கள் சங்கம்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) மற்றும் தமிழ்நாடு […]

Continue Reading

தமிழக முதல்வராக பதவி ஏற்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காமெடி நடிகர் சூரி நேரில் சென்று மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.!!

  தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு. க.ஸ்டாலினுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி வருகின்றனர் இன்று சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் சூரி நேரில் சென்று மலர் கொத்து கொடுத்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Continue Reading

மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தமிழக முதல்வராக பதவி ஏற்கப் போகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து.!!

தமிழக முதல்வராக பதவி ஏற்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மலேசிய மனிதவள துறை அமைச்சரும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவரும் டத்தோ ஸ்ரீ சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.!! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப்பெற்று புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கலைஞரின் அன்பு மகன் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம் என அவர் இந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   […]

Continue Reading