சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மண்டபத்தில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிக்கான தடுப்பூசி போடும் முகாமை இன்று தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகள் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி செலுத்த முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று செலுத்தப்படும் என்றும் இதற்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.