மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி உடலுக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி அஞ்சலி.!!

அருண் ஜெட்லி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் அஞ்சலி சோனியா காந்தி அஞ்சலின்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லி: முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் […]

Continue Reading

சென்னை பாஜக அலுவலகத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு அஞ்சலி.!!

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மரியாதைக்குரிய திரு அருண்ஜேட்லி அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாநில அமைப்புச் செயலாளர் திரு கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Continue Reading

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!! உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 9-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.

Continue Reading

ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!!

ஓபிஎஸ் மகனுடன் துரைமுருகன் அரைமணி நேரம் சந்திப்பு தேனியில் பரபரப்பு.!! முன்னாள் முதல்வர் ஜெ. இருந்தபோது கட்சிப் பொறுப்பாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசினாலோ அல்லது அவர்களுடைய குடும்ப விசேஷங்களில் கலந்து கொண்டாலோ உடனடியாக கட்சியின் அடிமட்ட உறுப்பினரிலிருந்தே தூக்கி விடுவார். அந்த அளவுக்கு அதிமுகவினர் எதிர்க்கட்சிகளிடம் பேசவும், பழகவும் அஞ்சி வந்தனர். ஆனால் தற்பொழுது ஜெ. இல்லாததால் அதிமுக வில் உள்ள பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமாகவே எதிர்க்கட்சிகளிடம் பேசுவதும், குடும்ப விஷயங்களுக்கு போய் வருவதும் நடைமுறையாகி விட்டது. அதுபோல் […]

Continue Reading

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.!!

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

ஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பிரபல இயக்குனர் பொன்ராம். அனைவருக்கும் பிடிக்கும் ‘ஜாம்பி’ – இயக்குநர் சிவா பேச்சு.!!

ஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பிரபல இயக்குனர் பொன்ராம். அனைவருக்கும் பிடிக்கும் ‘ஜாம்பி’ – இயக்குநர் சிவா பேச்சு.!! S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது, ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில் இருக்கும் தொழில்நுட்ப வசதி இங்கு கிடையாது. ஆனால், அதே தரத்தில் இந்த படத்தை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு […]

Continue Reading

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு .சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு .சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!! தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் […]

Continue Reading

இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!

இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!  சர்வதேச டிராக்டர் நிறுவனத்தின் தயாரிப்புகளான சோனாலிகா மற்றும் சோலிஸ் வகை டிராக்டர்களின் ஏற்றுமதி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்திலும் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் ஏற்றுமதி 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.டி.எல். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் மிட்டல் கூறுகையில், “டிராக்டர் ஏற்றுமதியில் எங்கள் நிறுவனம் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் மூன்று இலக்க வளர்ச்சியை […]

Continue Reading

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது.! இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்.!!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது.! இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்.!! முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ள முறை ஜனநாயக நாட்டில் ஏற்கத்தக்கதல்ல. சிபிஐ , வருமானவரித்துறை ஆகியவற்றை இந்த அரசு தனது ஏவல் ஆட்களாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் […]

Continue Reading

ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றது சி.பி.ஐ.!!

  ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றது சி.பி.ஐ.!! ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்து சிபிஐ போலீசார் அழைத்து வந்தபோது அந்த காரை காங்கிரஸ் தொண்டர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சிபிஐ விசாரனைக்குப் பிறகு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அப்படி ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால் […]

Continue Reading