இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!
கடந்த ஜூலை மாதத்திலும் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் ஏற்றுமதி 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.டி.எல். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் மிட்டல் கூறுகையில், “டிராக்டர் ஏற்றுமதியில் எங்கள் நிறுவனம் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் மூன்று இலக்க வளர்ச்சியை எட்டி சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 906 டிராக்டர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் அவற்றின் ஏற்றுமதி 1861-ஐ எட்டி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 108 சதவீத வளர்ச்சியாகும். இதையடுத்து நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் மட்டும் 5,155 டிராக்டர்களை ஐ.டி.எல். ஏற்றுமதி செய்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது