- ஹர்திக் பட்டேல் தொடர் உன்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல் நிலை மோசமானது. உயில் எழுத்தி வைத்தார்.!!
மும்பை : குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து 10-வதுநாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், 9 நாட்களாக, படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும் அவரது ரத்த அழுத்தம் சீராகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தான் உயிரிழக்கும்பட்சத்தில் தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சென்று சேரவேண்டும் என்று ஹர்திக் உயில் எழுதியுள்ளார். அதன்படி வங்கியில் உள்ள ரூ.50 ஆயிரத்தில், ரூ20 ஆயிரம் அவருடைய பெற்றோர்களுக்கும், மீதமுள்ள தொகை குஜராத்தில் தனது கிராமத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் பசுக்களின் வாழ்விடமான ‘பஞ்ச்ரபோல்’ இல்லத்திற்கு சேர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.