விமானத்தில் தமிழிசை பார்த்து பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய தூத்துக்குடி  மாணவி கைது.!!

தமிழகம்

விமானத்தில் தமிழிசை பார்த்து பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய தூத்துக்குடி  மாணவி கைது.!!

தூத்துக் குடி சென்ற விமானத்தில் பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகள் சோபியா, கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு பெற்றோருடன் தூத்துக்குடி வந்துள்ளார்.

இதனையடுத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் சோபியா ஆத்திரத்தில் பாஜக அரசின் பாசிச ஒழிக்க என்று முழக்கமிட்டுள்ளார். இதனை கேட்ட பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பெரில் புதுக்கோட்டை போலீசார் பெண் சோபியா மீது 209, 505 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜகவினர் 10 பேர் தங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தாக சோபியாவில் தந்தை கிருஷ்ணசாமி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

மாணவியை போலீஸ் கைது செய்தது அராஜக செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவரான தமிழிசை பெருந்தன்மையுடன் நடந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.*

தமிழிசை அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என இயக்குநர் கவுதமன் வலியுறுத்தியுள்ளார்.

தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்த மாணவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க  தலைவர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் பாஜக அரசை விமர்சித்தால் கைது செய்யப் படுவார்களா !! அப்படியென்றால் நானும்   விமர்சிக்கிறேன் பாஜக பாசிச அரசு ஒழிக என்று கூறுகிறேன். என்னையும் கைது செய்வார்களா எனக் கூறினர்.

பா.ஜ.வுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *