மலேசிய தமிழ் இயக்குநர் என்.பி. ராஜேந்திரன் தயாரிப்பில் புதிய இணைய தொடர்.!!

மலேசிய சினிமா

சென்னை ஜூன் 12

மலேசிய திரையுலகில்முன்னணி இளையஇயக்குநர்களில் ஒருவரானஎன்.பி.ராஜேந்திரனின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இணைய தொடர் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது இந்த இனிய தொடர் தயாரிப்பு 80 சதவீதம் முழுமையடைந்து விட்டது என இயக்குநர் என்.பி.ராஜேந்திரன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது ஆஸ்ட்ரோ வானவில்சிறந்த குறும்பட விருதை பெற்ற எனது தயாரிப்பின் துர்கா1.0 மற்றும் ஜொகூர் பாருஎல்எப்எஸ் சினிமா திரையரங்கில்திரையிடப்பட்ட துர்கா 2.0குறும்படத்தை தொடர்ந்து இந்தஇணைய தொடரை நான் ஆரம்பித்துள்ளேன்’ என்றார்

 இணைய உலகத்தின் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும்இந்த இணைய தொடர்சித்தரிக்கிறது.பொதுவாக இணைய உலகம்மக்களுக்கு பெரும் நன்மையை தந்து வருகிறது என்றுமக்கள் கருதி வருகின்றனர்.ஆனால் இணைய உலகத்தின் மறுபக்கம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறதுஎன்பதை இந்த இணையதொடர் சித்தரிக்கிறது. மனிதபேராசையால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைஇந்த இணைய தொடர்வெளிப்படுத்துகிறது என அவர் சொன்னார். இந்த இணையதொடரில் நடிக்கும் நடிகர்கள்  சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திரையரங்கில் மக்களின் தேவை என்ன என்பதை சித்தரிக்கும் வகையில் இவர்களின் நடிப்பாற்றல் இருக்கவேண்டும் என்பதே தமது பிரதான நோக்கம் என்றார்அவர்.இந்த இணைய தொடரின்படப்பிடிப்பு ஆகஸ்டு 2024 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரைசுமார் 80% நிறைவுபெற்றுவிட்டன.

இவ்வாண்டு இறுதியில் இந்த படம் திரையரங்குகளில்வெளியிடப்பட வேண்டும்என்பதே தமது இலக்கு என அவர் சொன்னார். இதைத்தொடர்ந்துஇந்த இணைய தொடர் யூடியூப் சேனலில் வெளியீடு காண வேண்டும் என்பதே தமது ஆசை என அவர் கூறினார்.இந்த இணைய தொடரில் இளங்கோவன், என்.பி.ராஜேந்திரன், சதீஷ் ரோய், நிஷா,காவேரி, ஹம்ஸா.சிந்தியா,வேணி, நேஷா,சில்வா.அற்புதம், மதுரா, பரமேஸ்வரி,தர்கிஸ் காயத்ரி, கோபி,தேவ்,மலர், தேவேந்திரன்,தர்ஷினி,ஆர்கே.கிரேஸ்,ஜெயந்தி, டாக்டர் கிஷென்.எம்ஜிஆர் காந்தி, இவான்சரேஸ்.அனிதா ஆகியோர்தங்களின் நடிப்பு திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த திரையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் கலைஞர் ரமேஷ்வரர சிறப்பாக தோன்றுகிறார். இந்த இணயதொடருக்கு இளங்கோவன் NEAAGENCYபிரதான ஆதரவை வழங்கி வருகிறார்.கலைஞர்களின் ஆதரவுRV Modeling Bootcampநிறுவனத்தைச் சார்ந்தசகாதேவன், கெவின் சேகர்,பவித்ரா. நந்தகுமார் மற்றும்ஜெயா. தமது RJ FILMS& PRODUCTIONநிறுவனத்தின் தயாரிப்பிலானஇந்த குறும்படம் மக்களின் மனதை கவரும் என அவர்நம்பிக்கை தெரிவித்தார்.இந்த குறும்படத்தின் உதவி இயக்குநர் நிஷா. சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் லாபத்தை கருத்தில் கொண்டு இதில் பங்கு பெறவில்லை.சினிமா திரை உலகில் கால்.பதிக்க வேண்டும் என்ற ஒரேநோக்கத்தில் தான் இவர்கள்இந்த இணைய தொடரில் நடிக்க முன்வந்துள்ளனர் என என்.பிராஜேந்திரன் கூறினார்.தமது அடுத்தடுத்த இயக்கத்தில் இளையஇந்திய கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தமதுவிருப்பம் என்றார்.இந்த இணைய தொடர் இந்தியா உள்பட உலகமெங்கும் சென்றடைய வேண்டும் என அவர் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *