ஜாதிவாரி கணக்கெடுப்பு
முதலியார் வேளாளர்கள் செங்குந்தர் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம்
ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது!!
சென்னை, ஜூன் 22
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்து உலக முதலியார் வேளாளர் செங்குந்தர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்துலக முதலியார், வேளாளர், செங்குந்தர்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் ஏ.சி சண்முகம், நீதி அரசர் இயக்குனர்கள் கே.எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, ராஜாராம், பழனி, சுதர்சன், லோகநாதன், பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் கு.பா பழனியப்பன், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், வா.பா பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் பேசிய ஏ.சி சண்முகம் கூறியதாவது : ஏ.சி.சண்முகம் மேடைப்பேச்சு
இந்த கூட்டமைப்பு ஒரு கூட்டமைப்பாக தான் செயல்படும். அரசியல் கலப்பில்லாத ஒரு அமைப்பாக இதை செயல்படுத்த வேண்டும். இதில் எந்த காரணத்தை முன்னிட்டும் (நான் உட்பட) அரசியல் இதிலே இருக்கக் கூடாது
ஜாதி வாரி கணக்கெடுப்பு ஒரு சில மாநிலங்களில் ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அறிவித்து 15 நாட்களுக்குள்ளாக ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க துவங்கும் போது வீடு வீடாக சென்று தான் ஆசிரியர்கள் அல்லது விஏஓக்கள் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவார்கள்
இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்றவர்களையும் கணக்கெடுக்கிறார்கள் ஆகவே இதில் ஒட்டுமொத்தமாக ஒன்றாக இருந்து இது எப்படி கொண்டு போக வேண்டும் என்ற ஒரு ஆலோசனைக்காக தான் இன்று அத்துணை நிர்வாகிகளையும் அழைத்திருக்கிறோம். அனைத்து நிர்வாகிகளும் வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.