சென்னை சேத்துப்பட்டில் போலீஸ் வாகன சோதனையின்போது சப் இன்ஸ்பெக்டர் தாக்கிய இளைஞரை கமிஷனரை சந்தித்து ஆறுதல் கூறினார்.!!

தமிழகம்

சேத்துப்பட்டில் வாகன சோதனையின் போது கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்னார் கமிஷனர்..!!

சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.ஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் கையையும் உடைத்துள்ளார்.  இந்நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு கமிஷனர் ஆறுதலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *