சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெண்ணின் கை கால்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மனைவி வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் படுகொலை என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தகவல் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம். மனைவியுடனான கருத்துவேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் தமிழ் இயக்குனராகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டவர் தான் எஸ்,ஆர்.பாலகிருஷ்னன் ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு பாலத்தின் கீழ் போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான செய்தியை டிவிகளில் பார்த்தவுடன் அவரது வீடு உள்ள சைதாப்பேட்டை ஜாபர்கான் பேட்டை பகுதி முழுவதும் மிகவும் பரபரப்புடன் அதிர்ச்சியுடன் பொது மக்கள் உள்ளனர்.


