



அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை சோழிங்கநல்லூர் 183 வது வட்டம் எம்.ஜி.ஆர் நகரில் இன்று காலை பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கிழக்கு பகுதி செயலாளர் கே.பி. கந்தன், மேற்கு பகுதி செயலாளர் லியோ சுந்தரம், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தனபால், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


