தென் சென்னை தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று ஜாபர்கான் பேட்டையில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

சென்னை

தென் சென்னை தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் அருகில் 139, 172 வது Vவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ, மற்றும் கோ.சாமிநாதன், கடும்பாடி, எம்.எம்.பாபு, பகுதி செயலாளர் என். எஸ்.மோகன், 139 வது வட்ட செயலாளர் சுகுமார், 172 வது வட்ட செயலாளர்கள் சீதாராமன், மூர்த்தி, கதிர் முருகன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க லோகநாதன், தே.மு.தி.க ஜெ.தினகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. சத்ய நாராயணா, ச.ம.க.பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ்,, புரட்சி பாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

சைதாப்பேட்டையில் வாழும் பொதுமக்கள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வேட்பாளரை வரவேற்பதற்காக மலர்களை தூவியும் வீதிகள் தோறும் பட்டாசுகள் வெடித்தும் சால்வை அணிவித்தும் தங்கள் தொகுதிக்கு வந்த வேட்பாளர் ஜெயவர்தனை வரவேற்றனர்.

வேட்பாளர் ஜெயவர்த்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது.

சைதாப்பேட்டை பகுதியைப் பொறுத்தவரையில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் பொதுமக்கள் உற்சாகத்தோடு வரவேற்பதாகவும் கூறினார் மேலும் சைதாப்பேட்டை பகுதியை பொறுத்தவரை பெண்களுக்கு அதிக அளவில் பாதுகாப்புகள் தேவைப்படுவதால் மாநகர காவல்துறை மூலம் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டு அவர்களுடைய பாதுகாப்பு தக்க வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்,

மழையினாலும் புயலினாலும் சைதாப்பேட்டை பகுதி மக்கள் அவதிப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினராக எங்களுடைய பணிகளை முழுமையாக செய்துள்ளேன் நிவாரணத்திற்காக 2800 கோடி நிவாரண பணிக்காக செலவு செய்ய பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று முதல் கட்ட தேர்தல் ஆரம்பமாகி உள்ளது என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்றும் உரிய நபரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு 100% இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *