லண்டன் காதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் .!!
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் மற்றும் மைக்கேல் கோர்சால் ஆகிய இருவரின் காதலும் பிரேக் அப் ஆகி முடிவிற்கு வந்துள்ளது. இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மைக்கேலின் புகைப்படங்களை அவர் நீக்கியுள்ளார்.


