தமிழ் மையம் சார்பில்
தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா.!!
சென்னை ஏப்ரல் 27,
தமிழ் மையம் சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ் மையத்தில் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டுவிழா நடைபெற்றது, அப்போது தமிழ் மய்யம் சார்பில் ஜெகத் கஸ்பர், ஹாக்கி அணியின் தலைவர் சேகர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டும் விதமாக நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
மே 3,4,5 ஆகிய நாட்களில் மலேசிய நாட்டில் “இரண்டாம் உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாடு” நடைபெற உள்ளது, 22 நாடுகள் பங்கேற்கும் அந்த மாநாட்டில் தங்கம் வென்ற கோமதி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.அப்போது தி ரைஸ் அமைப்பின் மூலம் கவுரவிக்கபட உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் வீராங்கனை கோமதி பேசியதாவது
- தமிழகம் சார்பாக விளையாட பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன், என்னை போன்று பலர் உதவி இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய உதவி கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் – கோமதி வேண்டுகோள் விடுத்தார்.
என்னை போன்று பலர் வெளி உலகத்துக்கு வராமல், விடுதிகளில் உரிய உணவின்றி இருக்கிறார்கள்.அவர்களுக்கு அரசு சார்ந்த உதவிகள் அதிகம் கிடைக்க வேண்டும், அப்படி கிடைக்கும் பட்சத்தில் பல பெண்கள் தங்கம் வெள்வதற்கு வாய்ப்பு உண்டு.
முடிகண்டம் என்பது ஒரு சில கிராம, பலரும் அறியதா ஊர். மின்சார வசதி இல்லை,மழை பெய்தால் ஒதுங்குவதற்கு இடம் கூடம் இல்லாத ஒரு இடம் ஆனால் நான் இந்த உயர்ந்த இடத்திற்கு வந்தது என் தந்தையால் மட்டுமே.
நான் மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பல விளையாட்டு வீராங்கனைகள் உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய உதவி தொகைகள் வழங்க வேண்டும்.
நான் ஒலிம்பிக்கில் வெல்வதற்கு வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெற வேண்டும், அதற்கு தமிழகத்தில் உதவி கிடைத்தால் நான் நிச்சயம் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவேன்.
தமிழகம் சார்பாக விளையாட பல பிரச்சனைகளை சந்தித்தேன், காரணம் நான் மற்றொரு மாநிலத்தில் அரசு வேலை பார்த்து கொண்டு இருந்ததால். ஆனாலும் தமிழகம் சார்பாக தான் விளையாட வேண்டும் என்று விளையாடினேன்
இவ்வாறு அவர் கூறினார்.
.